

சட்டசபையில் மாற்றுதிறனாளிகள் நலத்துறையில் 9 புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டார்.
அவை வருமாறு:
1. மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய மின்சார வாகன உதவி
உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரணம் வழங்கும் திட்டம்
உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களின் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பெட்ரோல் அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
2. மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக 10 இல்லங்கள்
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 10 இல்லங்கள் அமைக்க ரூ.1.82 கோடி நிதி
அரசு நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 10 இல்லங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.1.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
3. அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 தொழிற்பயிற்சி இல்லங்கள்
அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள் – ரூ.1.77 கோடி ஒதுக்கீடு
அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்படும். இதற்காக ரூ.1.77 கோடி நிதி ஒதுக்கப்படும்.
4. முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு 2 இல்லங்கள்
முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக 2 இல்லங்கள் – ரூ.49 லட்சம் நிதி
முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக, அரசு நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 2 இல்லங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
5. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பயிற்சி மையங்கள்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக 6 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள் – ரூ.97 லட்சம்
அறிவுசார் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென 3 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள், செவித்திறன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென 2 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள், பார்வை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென 1 ஆண்டு நிலை பயிற்சி மையம் என மொத்தம் 6 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
6. கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக 2 இல்லங்கள்.
கடலூரில் 100 பேர் பயன்பெறும் வகையில் 2 இல்லங்கள் – ரூ.10 கோடி நிதி.
கடலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 100 பேர் பயன்பெறும் வகையில், 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் 2 இல்லங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
7. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்
UDID அட்டை மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் துணையாளருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்
தனித்து செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள், UDID அட்டையைப் பயன்படுத்தி தங்களுடன் ஒரு துணையாளருடன் மாநகர/நகர தாழ்தள பேருந்துகள், விரைவு பேருந்துகள், டீலக்ஸ், புறநகர் மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
8. செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு மெய்நிகர் கற்றல்
செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு Virtual Reality Learning திட்டம்
செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் மெய்நிகர் கற்றல் முறையில் கல்வி கற்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.64 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
9. பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவி
பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை உயர்வு. பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்களைப் படிக்க உதவும் வாசிப்பாளருக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தப்படுகிறது.
2013–14ஆம் ஆண்டிலிருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.3,000, இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.5,000, தொழில்கல்வி மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.6,000 என உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
2026–27ஆம் ஆண்டு முதல் இந்த வாசிப்பாளர் உதவித்தொகை மேலும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.