

எல்லா கேள்விகளுக்கும் முதலமைச்சரின் ஆலோசனைக்கு பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என ஒரே பதிலை கூறி சமாளித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது விளையாட்டுத்துறை சம்பந்தமாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா 23 கேள்விகளுக்கு சளைக்காமல் தொடர்ச்சியாக பதில் அளித்தார்.
அதன் பிறகு பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் கேள்வி எழுப்பினார். அவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் நேரடியான பதில் அளிக்காமல் தன்னிடம் இருந்த ஒரு குறிப்பை பார்த்து பதிலை வாசிக்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து துணை கேள்விகள் கேட்கும் போதும் அதே பதிலை மீண்டும் கூற ஆரம்பித்தார்.
அப்போது அருகில் இருந்த அமைச்சர்கள் காந்திராஜ், வினோத் மற்றும் முன்னிருக்கையில் இருந்த அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா அவரிடம் சில ஆலோசனை கூறினர்.
இதையடுத்து அவர் எல்லா கேள்விகளுக்கும் முதலமைச்சரின் ஆலோசனைக்கு பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என ஒரே பதிலை கூறி சமாளித்தார்.