சட்டசபையில் ஊழல் புகார்- காரசார விவாதம்: அமைச்சர் அருண்ராஜ் பேச்சுக்கு திமுக, அதிமுக கடும் எதிர்ப்பு

மதவாத சக்தியை எதிர்த்தால் போதும், ஊழல் ஒரு பொருட்டல்ல என்பது அரை நூற்றாண்டில் தமிழகத்தின் வேதனை.
Minister Arunraj
Published on

தமிழக சட்டசபையில், சுகாதாரத்துறை மானிய கோரிக்கையின் மீது அமைச்சர் அருண்ராஜ் பதில் அளித்தார்.

அப்போது,"திமுக ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் கொண்டு வந்தாலும் லஞ்சத்தை எதார்த்தமாக மாற்றி விட்டார்கள். அதுதான் பிரச்சனை" என்றார்.

கடந்த ஆட்சியாளர்கள் ஊழலை அன்றாட வாழ்வின் எதார்த்தமாக பார்த்ததாக அமைச்சர் அருண்ராஜ் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

ஊழலை எதார்த்தமாக பார்த்த கடந்த ஆட்சியாளர்கள் என அமைச்சர் அருண்ராஜ் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது, எந்த கட்சி என்றே அமைச்சர் அருண்ராஜ் குறிப்பிடவில்லை, ஊழல் என்றால் திமுகவினர் கத்துவது ஏன் என அமைச்சர் ஆனந்த் கேள்வி எழுப்பினார்.

மேலும்," கடந்த ஆட்சியாளர்களில் அதிமுகவும் உள்ளனர். அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள், திமுகவினர் ஏன் அமளி" எனவும் அமைச்சர் ஆனந்த் கேள்வி எழுப்பினார்.

மதவாத சக்தியை எதிர்த்தால் போதும், ஊழல் ஒரு பொருட்டல்ல என்பது அரை நூற்றாண்டில் தமிழகத்தின் வேதனை.

ஊழல் இல்லா ஆட்சி தருவோம் என நம்பிக்கையுடன் முதலமைச்சர் சொல்ல காரணம் நாங்கள் நேர்மையாக தேர்தலை சந்தித்து வென்றதுதான்.

கட்சி தொடங்கும் முன்னே ஓட்டுக்கு பணம் இல்லை என்பதை முதலமைச்சர் விஜய் நின்று நிரூபித்தார்.

நல்ல அரசியலுக்கு தமிழ்நாட்டு மக்கள் என்று உறுதுணையாக இருப்பார்கள் என்பதை முதலமைச்சர் விஜய் முழுமையாக நம்பினார்.

முதல்கோணல் முற்றுலும் கோணல் என்பது போல் ஊழல் கலாச்சாரத்திற்கு தேர்தலில் லஞ்சம் கொடுப்பது முதல் விஷயம்.

யாரை ஊழல்வாதி என்கிறீர்கள்?- எ.வ.வேலு கேள்வி

ஊழல் செய்தார்கள் என யாரை கூறுகிறீர்கள், அண்ணாவையா? எம்ஜிஆரையா? ஜெயலலிதாவையா, கலைஞரயைா?

கடந்த கால ஆட்சியாளர்கள் என குறிப்பிடும் அமைச்சர் அருண்ராஜ் திராவிட இயக்கங்களை குறிப்பிட்டு யாரை பேசுகிறார்?

ஓ.எஸ்.மணியன்

ஊழல் வழக்குகள் உள்ள இரண்டு முன்னாள் அமைச்சர்களை தவெகவில் சேர்த்துக்கொண்டீர்களே.

ஊழலை பற்றிபேசும் அருகதை தவெகவிற்கு கிடையாது.

சபாநாயகர் அறிவுரை

தகுந்த ஆதாரத்துடன் ஊழல் என குறிப்பிட்டு பேச வேண்டும், பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது.

ஊழல் குறித்து அமைச்சர் பேசியதும் அதற்கு திமுக, அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சபாநாயகர் அறிவுரை வழங்கினார்.

ஊழல் குறித்து நடத்தப்பட்ட அனைத்து பேச்சும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com