முதலமைச்சரை போன்று தமிழ்நாடும் நலமாக மாறப் போகிறது - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

இளைஞர்களுக்கும், பெண்களுக்காகவுவே இந்த அரசு.
Aadhav Arjuna
Published on

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா காமராஜர் சாலையில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாரத்தான் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய், Start Run, Stop Drugs, Sports ah edu Drugs ah vidu என்ற விழிப்புணர்வு வாசகத்தை எழுதி கையெழுத்திட்டார்.

அவருடன் மாரத்தான் ஓட்டத்தில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, மரிய வில்சன், வெங்கடரமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலமைச்சர் விஜய் 3 கி.மீ. ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மாரத்தானில் பங்கேற்ற பின்னர் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:

* முதலமைச்சரை போன்று தமிழ்நாடும் நலமாக மாறப் போகிறது.

* இளைஞர்களுக்கும், பெண்களுக்காகவுவே இந்த அரசு.

* விளையாட்டின் முகமாக முதலமைச்சர் இருப்பார்.

* தமிழ்நாட்டில் எல்லா இளைஞர்களும் போதைப்பொருளை தூக்கி போட்டுவிட்டு ஓடப்போகிறார்கள். அதற்கு மைதானம் ரெடி ஆகி விட்டது.

* இதுவரை இருந்த முதலமைச்சரில் மாரத்தானில் பங்கேற்று 3 கி.மீ. ஓடிய தமிழ்நாட்டில், இந்தியாவில் ஒரே முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் ஜோசப் விஜய் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com