போதைப்பொருள் ஒழிப்பு தினம்: மெரினாவில் ஓடி விழிப்புணர்வு மாரத்தானை தொடங்கி வைத்த முதல்வர் விஜய்

முதல்வர் விஜய் உறுதிமொழி வாசித்தார்
விஜய்
விஜய்
Published on

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று (ஜூன் 26) அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி 'Start Run, Stop Drugs' என்ற பெயரில் இன்று காலை சென்னை மெரினா காமராஜர் சாலையில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த மாரத்தான் ஓட்ட தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு முதல்வர் விஜய் உறுதிமொழி வாசிக்க அங்கு கூடியிருந்த மாணவர்கள் உட்பட அனைவரும் அதை வழிமொழிந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக அங்கு வைக்கப்பட்டிருந்த வெள்ளை போர்டில் போதைப்பொருளுக்கு எதிரான முதல் கையெழுத்தை விஜய் போட்டார்.

இதன்பின் முதல்வர் விஜய் மாரத்தான் ஓட்டத்தை முதல் ஆளாக ஓடி தொடங்கி வைத்தார். அவருடன் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com