மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த அரசு பயப்படுவது ஏன்? - உதயநிதி

மேகதாது விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அவைக்கு விளக்க வேண்டும்.
உதயநிதி
உதயநிதி
Published on

தவெக அரசின் முதல் பொது பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண்மை பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது.

சட்டசபை கூடியதும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இரங்கல் குறிப்பு வாசித்தார்.

மறைந்த திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ், கவிஞர் மற்றும் எழுத்தாளர் புவியரசு, மறைந்த பின்னணி பாடகி ஜானகி, எழுத்தாளர் பூமணி, முன்னாள் சட்டசபை உறுப்பினர் சுருளிவேல் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதையடுத்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின்

மேகதாது அணை விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர்,

"விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கி உள்ளோம்.

முழு தள்ளுபடி என சொல்லிவிட்டு பயிக்கடனை அரைகுறையாக தள்ளுபடி செய்தது ஏன் என அரசு பதில் அளிக்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும்.

மேகதாது விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அவைக்கு விளக்க வேண்டும்.

கர்நாடகா அதிக வேகம்

தவெக அரசு அமைந்த பின்னர் மேகதாது விவகாரத்தில் அதிக வேகம் காட்டுகிறது கர்நாடகா.

மேகதாது அணை கட்ட வேண்டும் என கர்நாடக தரப்பில் நிதியமைச்சர் நிர்மலா சந்தித்து நிதி கேட்டுள்ளனர். ஆக.2-ல் பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார் கர்நாடக முதல்வர்.

கர்நாடகம் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் 5 முன்னாள் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகா முதலமைச்சர் நேரில் சந்தித்து மேகதாவில் அணை கட்ட நிதி உதவி கோரியிருந்தார். ஜல்சக்தி துறை அமைச்சரையும் சந்தித்து மேகதாது அணைக்கட்ட ஒப்புதல் வழங்க கோரிக்கை விடுத்தார்.

இப்படி கடந்த ஒரு மாதத்தில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பல்வேறு பணிகளை கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்படுகிறது.

அனைத்துக்கட்சி கூட்டம்

எனவே தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்துகின்றன.

அனைத்து கட்சிகளும் இணைந்து மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட நாம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஏன் பயப்படுகிறீர்கள் அல்லது ஏன் தயங்குகிறீர்கள்?" என கேள்வி எழுப்பினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com