

தீ விபத்து குறித்து மரக்காணம் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரக்காணம் அருகே முட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன்(55).
இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு இவரது கூரை வீட்டில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவல்லை.
இந்த நிலையில் சந்திரனின் வீட்டில் எரிந்த தீ அருகே உள்ள காமாட்சி(70) என்பவரின் வீட்டின் மீது பரவி எரிந்தது. 2 வீடுகளும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் மரக்காணத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பாகவே வீடு மற்றும் வீட்டில் இருந்த பத்திரம், மாணவர்களின் கல்வி சான்றுகள், குடும்ப அட்டை ஆதார் அட்டை, பீரோ, டிவி, பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சேதமாகி விட்டது. இந்த இரண்டு வீட்டிலும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து குறித்து மரக்காணம் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.