

கார்த்திகை தீபம் திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதமான கார்த்திகையில் கிருத்திகை நட்சத்திரமும் பவுர்ணமியும் இணையும் நாளில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்!
இருளை அகற்றி ஒளியை ஏற்றும் திருநாள் கார்த்திகை தீபம்.
அறியாமை என்னும் இருளை அகற்றி, அறிவு என்னும் ஒளியைப் பரப்புவோம். வெறுப்பையும் பிளவுகளையும் விலக்கி, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, மனிதநேயம் ஆகியவற்றை நம் வாழ்வில் ஏந்துவோம்.
திருக்கார்த்திகை தீபத்தின் பேரொளி, தமிழகத்தின் ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியையும் அமைதியையும் நம்பிக்கையையும் நிறைக்கட்டும்.
அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்!
ஒளி பெருகட்டும்!
அன்பு மலரட்டும்!
தமிழகம் சிறக்கட்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.