மாங்காட்டில் வீடு புகுந்து கள்ளக்காதலிக்கு கத்திக்குத்து- தொழிலாளி கைது

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கஸ்தூரியை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மாங்காட்டில் வீடு புகுந்து கள்ளக்காதலிக்கு கத்திக்குத்து- தொழிலாளி கைது
Published on: 
Summary

மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சம்பத்தை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

மாங்காடு அடுத்த பரணி புத்தூர் பெரிய கொளுத்து வான்சேரி பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி (32). கணவரை பிரிந்த இவர் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கும் டைல்ஸ் வேலை செய்யும் சம்பத் என்பவருடன் கடந்த சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

கள்ளக்காதல்

இந்த நிலையில் கஸ்தூரி கடந்த சில நாட்களாக சம்பத்திடம் பேசுவதை தவிர்த்தார். மேலும் அவருடன் பழகுவதை நிறுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சம்பத்திற்கு கஸ்தூரி மீது சந்தேகம் ஏற்பட்டது.

இன்று அதிகாலை கஸ்தூரியின் வீட்டுக்கு வந்த சம்பத் கடும் வாக்குவாதம் செய்தார். மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியால் கஸ்தூரியின் மார்பில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்ட கஸ்தூரி ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

கைது

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கஸ்தூரியை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சம்பத்தை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

X