

போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி பஸ் நிலையம் அருகே தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நகைக்கடன் வழங்கப்படுகிறது. இந்த நிதி நிறுவனத்தின் கிளை மேலாளராக கூனாண்டியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிலம்பரசன் (வயது 35) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பணிபுரிந்து வந்தார்.
இந்நிறுவனத்தில் கடந்த 19,20 -ந்தேதிகளில் அலுவலர்கள் நகைகளை தணிக்கை மேற்கொண்டனர். அதில் வாடிக்கையாளர்களின் பெயரில் நகைகள் அடமானம் வைத்துள்ளதும், பின்னர் அந்த நகைகளை லாக்கரில் இருந்து எடுத்து தனியே பல்வேறு கணக்குகளில் மீண்டும் அடமானம் வைத்து பணம் எடுத்து முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தணிக்கை குழுவினரின் விசாரணையில் இந்த முறைகேடை கிளை மேலாளர் சிலம்பரசன் செய்ததும் அவர் 703 கிராம் நகை மூலம் ரூ.77 லட்சத்து 7 ஆயிரம் கையாடல் செய்துள்ளதும், 23 பேரின் தங்க நகை அடமான கடன்களில் இந்த மோசடி செய்துள்ளதும் தெரிந்தது. இது குறித்து தனியார் நிறுவனத்தின் சேலம் மண்டல மேலாளர் நீலமேகம் மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.