

லாரியில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்திருப்பது தெரிந்தது.லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவர் சுரேசை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக சென்னைக்கு ஆற்று மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு இன்ஸ்பெக்டர் சிவகுமார், தலைமை காவலர் ராஜா மற்றும் போலீசார் திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னைநோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்திருப்பது தெரிந்தது.லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவர் சுரேசை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.