மாமல்லபுரத்தில் வாலிபர் அடித்துக்கொலை?- கடற்கரையில் உடல்வீச்சு

மாயமானவர்கள் பற்றிய விபரங்களை சேகரித்து மாமல்லபுரம் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரத்தில் வாலிபர் அடித்துக்கொலை?- கடற்கரையில் உடல்வீச்சு
Published on: 
Summary

கடற்கரையில் பாறைகளுக்கு இடையே உடல் மீட்கப்பட்டு உள்ளது. எனவே அவரை யாரேனும் அடித்து கொலை செய்து விட்டு பாறைகளுக்கு இடையே உடலை வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மாமல்லபுரம் அடுத்த புது கல்பாக்கம் மீனவர் பகுதியில் கடற்கரை பகுதியில் வாலிபர் ஒருவரின் உடல் ரத்த காயங்களுடன் அப்பகுதி பாறை இடுக்கில் கிடந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கடலோர காவல் படை உதவி ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் மாமல்லபுரம் போலீசார் அங்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார்

இறந்து போன வாலிபருக்கு சுமார் 30 வயது இருக்கும். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. அவரது தலை, முகம், முழங்கால் பகுதிகளில் ரத்த காயங்கள் இருந்தன. கடலில் மூழ்கி இறந்து இருந்தால் அவரது முகத்தில் மணல் இருக்கும்.

ஆனால் கடற்கரையில் பாறைகளுக்கு இடையே உடல் மீட்கப்பட்டு உள்ளது. எனவே அவரை யாரேனும் அடித்து கொலை செய்து விட்டு பாறைகளுக்கு இடையே உடலை வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இறந்து போன வாலிபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக கல்பாக்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மாயமானவர்கள் பற்றிய விபரங்களை சேகரித்து மாமல்லபுரம் போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X