

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு வீட்டில் சமைத்த உணவை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு வீட்டில் உணவு வழங்குவது குறித்து சென்னை நீதிமன்றத்தில் அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது, அரசு தரப்பு ஆய்வு செய்து முடிவெடுப்பதாகத் தெரிவித்த நிலையில், தற்போது வீட்டில் சமைத்த உணவை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகளுக்கு முறையற்ற வகையில் அங்கீகாரம் வழங்க சுமார் 100 கோடி ரூபாய் முதல் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாகக் கூறப்பட்ட வழக்கில், மத்திய குற்றப்பிரிவு போலிசாரல் கைது செய்யப்பட்டார்
சென்னை சிறப்பு நீதிமன்றம் நவம்பர் 6, 2026 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. தற்போது அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பில் மகேசுக்கு முறையான உணவு வழங்கப்படாததால், அவர் 4 நாட்களில் 4 கிலோ எடை குறைந்துள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் சப்பாத்தியை அவரால் சாப்பிட முடியவில்லை என்றும், எனவே அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வீட்டு உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது
நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி, மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி எண்ணெய் இல்லாத உணவு, சாதம், ரசம், மற்றும் வேகவைத்த காய்கறிகள் தற்போது சிறையில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இவரின் தரப்பு அன்பில் மகேஷ் தரப்பின் வீட்டு உணவு கோரிக்கையை ஏற்று, அதுகுறித்து ஆய்வு செய்து முடிக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில்,
தற்போது சிறையில் இருக்கும் அன்பில் மகேஷ்க்கு வீட்டில் சமைத்த உணவினை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.