

தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.400 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அதேபோன்று, தனது இல்லத்தில் நடந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனுக்களுக்கு பதிலளிக்க போலீசார் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து, விசாரணையை 2-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி சத்தியமூர்த்தி உத்தரவிட்டார்.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.
அன்பில் மகேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு நீதிபதி சத்தியமூர்த்தி முன் விசாரணை நடைபெற்றது.
அப்போது, அன்பில் மகேஷ் தரப்பில்,
* புழல் சிறையில் முதல் வகுப்பு மற்றும் முறையான உணவு வழங்கவில்லை.
* மற்ற கைதிகளுக்கு வழங்கும் சப்பாத்தி மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அதை சாப்பிட முடியாமல் உடல் எடை குறைந்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
* புழல் சிறையில் அன்பில் மகேஷ் அடைக்கப்பட்டுள்ள அறையில் இரவில் மின்விளக்கை வேண்டுமென்றே எரிய விடுகின்றனர்.
* புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஷுக்கு வீட்டு உணவு வழங்க வேண்டும். அன்பில் மகேஷ் உடல் எடை 4 கிலோ குறைந்துள்ளது என்று அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.