வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி- ஐகோர்ட்

2021-ம் ஆண்டு மற்றும் 2026ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஒப்பீட்டால், ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.
எடப்பாடி பழனிசாமி
Published on

அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, வேட்புமனுவில் சொத்து, வருமான விவரங்களை மறைத்தது குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தபோது, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார். இந்த தேர்தலில் அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் சொத்து விவரங்கள், வருமான விவரங்களை எடப்பாடி பழனிசாமி மறைத்துள்ளதாக கூறி எடப்பாடி தொகுதி வாக்காளர் சக்திவேல் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவில் சொத்துக்கள் குறித்து முழுமையான விவரங்களை தெரிவிக்கவில்லை. 2021-ம் ஆண்டு மற்றும் 2026ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுக்களை ஒப்பீட்டால், ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. உண்மை தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. இது குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வருமானவரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல், ஏற்கனவே இதேபோல வழக்குகளில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. மனுதாரர் தேர்தல் வழக்குதான் தொடர முடியும்’’ என்று கூறினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com