ராசிபுரம் அருகே இன்று அதிகாலை பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து

பெயிண்ட் லாரியை ஓட்டி வந்த ஈரோட்டை சேர்ந்த லாரி டிரைவர் மதன் என்பவர் படுகாயம் அடைந்து இடர்பாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார்.
ராசிபுரம் அருகே இன்று அதிகாலை பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து
Published on: 
Summary

ராசிபுரம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து ஏற்பட்டது. பெயிண்ட் லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார். சாலையில் பெயிண்ட் பரவியதால் போக்குவரத்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. போலீசார் மீட்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் இருந்து 30 டன் தவிடு லோடு ஏற்றிக் கொண்டு நாமக்கல்லிற்கு டாரஸ் லாரி ஒன்று நேற்றிரவு சென்றது. சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் அடுத்த தாத்தையங்கார்பட்டி அருகே சென்றபோது லாரியின் பின்பக்க டயர் பஞ்சராகி முழுமையாக சேதமடைந்ததாக தெரிகிறது.

விபத்து

பின்னர் உடனடியாக லாரியின் டயரை மாற்ற முடியாததால் இன்று காலையில் டயரை மாற்ற திட்டமிட்டு நேற்றிரவு தேசிய நெடுஞ்சாலையின்யோரத்தில் லாரி நிறுத்தப்பட்டது.

இதனிடையே இன்று அதிகாலையில் பெயிண்ட் லோடுடன் சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற மற்றொரு லாரி பழுதாகி நின்ற தவிடு ஏற்றி வந்த லாரியின் மீது மோதி விபத்தானது.

சாலையில் ஓடிய பெயிண்ட்

இதில் பெயிண்ட் ஏற்றி வந்த லாரியின் முன்பக்கம் சேதமடைந்ததோடு, பெயிண்ட் சாலையில் ஆறுபோல ஓடியது. மேலும் பெயிண்ட் லாரியை ஓட்டி வந்த ஈரோட்டை சேர்ந்த லாரி டிரைவர் மதன் என்பவர் படுகாயம் அடைந்து இடர்பாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார்.

தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்‌. சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு டிரைவர் மதன் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்தின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் நீடித்தது. இதையடுத்து போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ரோந்து போலீசார் ஈடுபட்டனர்.

X