தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக்கில் சரக்கு தட்டுப்பாடு - மதுபிரியர்கள் அவதி!

சென்னை தி.நகரில் அலமாரிகள் காலி, ஓட்கா, பிராந்தி, பீர் கிடைக்காமல் விற்பனையாளர்கள் தவிப்பு - புதிய ஆர்டர் முறையால் சீராகும் என நம்பிக்கை
TASMAC - Liquor Shortage
Published on
Summary

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சில நாட்களாக மதுபானம் தட் டுப்பாடு நிலவி வருகிறது.

சென்னை மட்டுமின்றி கடலூர், சிதம்பரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளில் கேட்கும் சரக்கு இல்லாத நிலை காணப்படுவதாக வாடிக்கையாளர்கள் கூறி வருகின்றனர்.

சென்னையில் மது தட்டுப்பாடு

சில்லரை விற்பனை கடைகளில் குறிப்பிட்ட சில பிராண்டுகள் மற்றும் பீர் வகைகள் போதிய அளவில் கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் சுமார் 600 மதுபான கடைகள் உள்ளன. கடந்த சில வாரங்களாக கிடங்கிற்கு வரும் மதுபானங்கள் வினியோகம் குறைவாக உள்ளதாக டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.

சரக்கு தட்டுப்பாடு

தி.நகர் ஜி.என்.ஷெட்டி சாலையில் உள்ள மதுபான கடையில் சரக்கு இன்றி அலமாரிகள் கிட்டத்தட்ட காலியாக இருப்பதை காண முடிந்தது. நகரின் பல கடைகளில் இதே நிலைமை காணப்பட்டது.

மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், எந்தவொரு மதுபான கடையிலும் கேட்கும் சரக்கு கிடைப்பதில்லை. குறிப்பாக ஓட்கா கேட்டால் இருப்பு இல்லை என்கிறார்கள். மெக்டொவல்ஸ் பிராந்தி மற்றும் பீர் வகைகள் கூட தட்டுப்பாடாக உள்ளது என்று விற்பன யாளர்கள் கூறுகின்றனர்.

இறக்குமதி தாமதத்தால் தட்டுப்பாடு

லாரிகளில் இருந்து மது பானங்களை இறக்குவதற்காக பணியாளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் முன்பு போல் அதே வேகத்துடன் சரக்குகளை கொண்டு வருவதில்லை. இதுவும் தட்டுப்பாடுக்கு ஒரு காரணம் என்று கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள 11 மதுபான ஆலைகளில் இருந்து இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள், 7 பீர் தயாரிக்கும் ஆலைகளில் இருந்து டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல் செய்கிறது.

டாஸ்மாக் ஆர்டர் மாற்றம்

மாவட்ட மேலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சில வினியோகஸ்தர்களுக்கு சாதகமாக ஆர்டர்களை பெறுவதை தடுப்பதற்காக டாஸ்மாக் சமீபத்தில் அனைத்து வினியோகஸ்தர்களிடம் இருந்து சமஅளவில் மதுபானங்களை ஆர்டர் செய்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் சம அளவிலான ஆர்டர்முறை திரும்ப பெறப்பட்டு உண்மையான விற்பனையின் அடிப்படையில் ஆர்டர்கள் பெறப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே குறிப்பிட்ட மது பானங்கள் தட்டுப்பாடு என்ற நிலை இனிமேல் ஏற்படாது என்று மேற்பார்வையாளர்கள் கூறினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com