டம்மி முதலமைச்சருக்கு மக்கள் ஆதரவோடு இடைத்தேர்தலில் பாடம் புகட்டுவோம்- உதயநிதி

அன்பு சகோதரர் பரந்தாமன் அவர்களை வெற்றி பெற செய்திட அயராது உழைக்க வேண்டும் உரையாற்றினோம்.
Udhayanithi stalin
Published on

"சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு என அனைத்து வகையிலும் மக்களை வதைக்கும் Dummy முதலமைச்சருக்கு மக்கள் ஆதரவோடு இடைத்தேர்தலில் பாடம் புகட்டுவோம்.

SofaModel ஆளுங்கட்சியின் குதிரை பேர அரசியலால் திணிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பரந்தாமன் வெற்றிக்கு பாடுபட வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்டம் - கிளை - பாக இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டோம்.

சோபா மாடல் ஆளுங்கட்சியின் குதிரை பேர அரசியலால் திணிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அன்பு சகோதரர் பரந்தாமன் அவர்களை வெற்றி பெற செய்திட அயராது உழைக்க வேண்டும் உரையாற்றினோம்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு - மின்வெட்டு - விலைவாசி உயர்வு என அனைத்து வகையிலும் தமிழ்நாட்டு மக்களை வதைக்கும் டம்மி முதலமைச்சருக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவோடு பாடம் புகட்டும் வகையில் தேர்தல் பணிகளை அமைத்துக்கொள்வோம் என ஆலோசனைகளை வழங்கினோம்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com