திருச்செந்தூர் அருகே மணப்பாட்டில் லட்சக்கணக்கில் கரை ஒதுங்கிய மீன்கள்

லட்சக்கணக்கான மீன்களை மக்கள் அள்ளிச் சென்றனர்.
மீன்கள்
மீன்கள்
Published on: 

திருச்செந்தூர் முருகன் கோவில் அருகே கடல் அடிக்கடி உள்வாங்கும் சம்பவம் நிகழ்வதுண்டு. சில சமயங்களில் பல மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கும். பின்னர் சஜக நிலைக்கு திரும்பும்.

திருசெந்தூரை ஒட்டி மீன்பிடி கிராமங்கள் பல உள்ளன. இங்குள்ள கடற்கரைகளில் மணல் அரிப்பும் ஏற்படுவதுண்டு.

கரை ஒதுங்கிய மீன்கள்

இப்படி கடற்கரையோர மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் கடல், இன்று மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாட்டில் இன்று காலை திடீரென சாலை மீன்கள் லட்சக்கணக்கில் கரை ஒதுங்க தொடங்கியது. உயிருடன் துடிதுடித்துக் கொண்டிருந்த மீன்களை மக்கள் பார்த்ததும் கூடைகள் கொண்டு வந்து அள்ளிச் சென்றனர்.

மழைக்காலங்களில் இது போன்று திடீரென மீன்கள் கரை ஒதுங்குவது வழக்கம் எனக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் மீன்கள் கரை ஒதுங்கியதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவில்லை.

X