மத்திய அமைச்சர், மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் எல். முருகன்

தகவல் மற்றும் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சராக இருந்தார்.
எல் முருகன்
எல் முருகன்
Published on: 

தமிழ்நாட்டைச் சேர்ந்த எல். முருகன் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். இவர் மத்திய இணை அமைச்சராகவும் உள்ளார். சென்னையில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்ட நிகழ்ச்சியில் எல். முருகன் கலந்து கொண்டார்.

மந்திரி, மாநிலங்களவை எம்.பி. பதவி ராஜினாமா

இந்த நிலையில் எல். முருகன் தனது மத்திய இணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பாரத மாதாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் சேவையாயாற்றியது என் வாழ்வின் மிகப்பெரிய பெருமையாகும். மீண்டும் முழு நேர கட்சிப் பணிக்குத் திரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தகவல் மற்றும் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜினாமா செய்வது குறித்து எல். முருகன் கூறியதாவது:-

தமிழ்நாட்டிற்கு செல்ல விருப்பம் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். அங்கு எனது கட்சியை வலுப்படுத்தவும், 2029-ம் ஆண்டுத் தேர்தலுக்கான களப்பணிகளை மேற்கொள்ளவும் நான் விரும்புகிறேன்.

நமது பிரதமர் எப்போதும் தமிழர்களின் பெருமையை உலக அளவில் முன்னிறுத்தி வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் நமது பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருந்தார். அப்போது அவர் மீது மக்கள் கொண்டிருந்த உற்சாகத்தையும் அன்பையும் நான் நேரில் கண்டேன். எனவே, அங்கு சென்று கட்சியை வலுப்படுத்த இன்னும் விரிவாகப் பணியாற்ற வேண்டும் என்று நான் கருதினேன்.

எனது அமைச்சர் பொறுப்புகளிலிருந்து என்னை விடுவித்து, கட்சியை வலுப்படுத்துவதற்காக மாநிலத்திற்கு அனுப்பி வைக்குமாறு பிரதமரிடம் நான் கோரிக்கை விடுத்துள்ளேன்.

இவ்வாறு எல். முருகன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com