திமுகவின் 26 வயது இளம் வயது வேட்பாளருக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ள எல்.முருகன்!

தமிழ்நாடு பாஜக இன்று தேர்தலுக்கான தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
திமுகவின் 26 வயது இளம் வயது வேட்பாளருக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ள எல்.முருகன்!
Published on: 

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அவினாசி (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் 26 வயதான இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலாமணிக்கு எதிராக, பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் களம் இறக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 28ஆம் தேதி திமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அப்பட்டியலில் மிக இளம் வயது வேட்பாளர் கோகிலாமணி மக்களிடையே கவனம் ஈர்த்தார். அவர் அவினாசி தொகுதியில் களமிறக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பாஜக இன்று தான் போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வெளியிட்டுள்ளது.

இதில் அதிமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அவினாசி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. திமுகவின் இளம்வயது வேட்பாளருக்கு எதிராக மத்திய அமைச்சரை பாஜக களம் இறக்கியுள்ளதால் இத்தேர்தலில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com