கிருஷ்ணகிரி அருகே சோகம்: கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

தனியார் தொழிற்சாலையில் 3 பேரும் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.
Toxic Gas
Published on: 
Summary

கிருஷ்ணகிரி அருகே தனியார் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே வன்னியபுரத்தில் உள்ள தனியார் செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 3 ஒப்பந்த தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சாரதிகுமார் (25), அக்மல் பாபுபாய் (28), காவேரி (32) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை தொட்டியை சுத்தம் செய்தபோது 3 பேரும் மயங்கி விழுந்தனர். ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கழிவுநீர் துர்நாற்றத்தை தடுக்க பயன்படுத்தப்பட்ட ரசாயனமே விஷவாயுவாக மாறியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பாதுகாப்பு குறைபாடு குறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X