நாளை கிருஷ்ண ஜெயந்தி: இபிஎஸ்- அன்புமணி வாழ்த்து

நமது கடமை என்ற உயரிய குறிக்கோளுடன் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும்.
EPS- Anbumani ramadoss
Published on

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்பு மணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி:

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தீமைகளை முறியடிக்க வேண்டும் என்று உறுதியேற்க வேண்டும்.

'அறம் பிறழ்கின்றபோது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்' என்ற கண்ணபிரானின் போதனைக்கேற்ப, அறத்தை வளர்ப்பதே நமது கடமை என்ற உயரிய குறிக்கோளுடன் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும்.

ஸ்ரீகிருஷ்ண பகவான் அவதரித்த இந்த இனிய திருநாளில், மக்கள் வாசலில் இருந்து வீட்டின் பூஜை அறை வரை அரிசி மாவு கரைசலால் குழந்தையின் பாதங்களை பதித்து, ஸ்ரீ கிருஷ்ண பகவானே தங்கள் இல்லத்திற்கு வந்ததாக பாவித்து போற்றி வணங்கி மகிழ்வார்கள்.

இந்த இனிய நாளில் நாடெங்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, மீண்டும் ஒரு முறை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி:

அநீதியை ஒழிப்பதற்காகவும், நீதியை நிலை நிறுத்து வதற்காகவும் கிருஷ்ண பரமாத்மா பூமியில் அவதாரம் எடுத்த நாளான கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் அமைதி, வளம், மகிழ்ச்சி, சகோதரத்துவம், அன்பு, அறம் உள்ளிட்ட அனைத்தும் செழிக்க வேண்டும் என்று கூறி அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை கிருஷ்ண ஜெயந்தி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com