கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிப்பு: தமிழ்நாட்டில் காலி தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

கொளத்தூர் தொகுதிக்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் 5 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருந்தன.
Assembly constituency
Published on: 
Summary

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாகத் தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தவெக உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானதைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாகத் தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

சுவாசப் பிரச்சனை காரணமாக கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ்.பாபு (75), 70 நாட்களுக்கும் மேலாகத் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நவம்பர் 19ஆம் தேதி காலமானார். கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட அவர், 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து கொளத்தூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியாக உள்ள தொகுதிகள்

கொளத்தூர் தொகுதிக்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் 5 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருந்தன. முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வென்ற திருச்சி கிழக்கு தொகுதி அவர் பதவியை ராஜினாமா செய்ததால் காலியானது. மேலும், பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம் மற்றும் கரூர் ஆகிய தொகுதிகளும் பதவி விலகல்களால் காலியாக உள்ளன. தற்போது கொளத்தூர் தொகுதியும் சேர்ந்து மொத்தமாக 6 தொகுதிகள் காலியாக உள்ளன.

இடைத்தேர்தல் எதிர்பார்ப்பு

ஒரு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், தேர்தல் ஆணைய விதிகளின்படி 6 மாதங்களுக்குள் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். கொளத்தூர் தொகுதி காலியானதைத் தொடர்ந்து, அங்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தல் மற்றும் நிலுவையில் உள்ள மற்ற தொகுதிகளின் தேர்தல் அறிவிப்புகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் கவனம் அதிகரித்துள்ளது.

X