ஜனாதிபதியுடன் குஷ்பு 'திடீர்' சந்திப்பு

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை திடீரென சந்தித்தார்.பெண்கள் பிரச்சினை மற்றும் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.
ஜனாதிபதியுடன் குஷ்பு 'திடீர்' சந்திப்பு
Published on

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்பவர் குஷ்பு. பாரதிய ஜனதா கட்சியில் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். பெண்கள் பிரச்சினை மற்றும் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் குஷ்பு நேற்று முன்தினம் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை திடீரென சந்தித்தார். சந்திப்பின்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பெண்கள் பிரச்சினைகள் பற்றியும் ஜனாதிபதி முர்முவுடன் குஷ்பு விவாதித்துள்ளார். ஜனாதிபதி முர்முவை சந்தித்த புகைப்படங்களை குஷ்பு தனது வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com