சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடம்- கட்டுமான பணிகள் தீவிரம்

கலைஞர் நினைவிடத்தில், திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. வருகிற ஜூன் 3-ந்தேதி கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடம் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக  நடந்து வருவதை காணலாம்.
சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடம் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதை காணலாம்.
Published on

சென்னை:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள், சிந்தனைகளை அடுத்த தலைமுறை அறியும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது

கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்தன் அடையாளமாக உதயசூரியன் போன்று முகப்பில் கருணாநிதி நினைவிடத்தில் 3 வளைவுகள் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த நவம்பர் 8-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த 28-ந்தேதி ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

கலைஞர் நினைவிடத்தில், திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இதற்காக கடற்கரையில் கருணாநிதி நினைவிட வளாகத்தில் இரும்பு தடுப்புகள் மற்றும் தகரம் மூலம் 30 அடி உயரத்துக்கு வேலி அமைக்கப்பட்டது

கருணாநிதி நினைவிட முகப்பில் 3 வளைவுகள் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக அங்கு 15 அடி ஆழத்தில் துளைகள் போடப்பட்டு உள்ளது. 3 வளைவுகள் சிமெண்ட் கான்கிரீட்டில் அமைக்கப்படுகிறது. அந்த கான்கிரீட் வளைவுகளில் கிரானைட் அல்லது மார்பிள் கற்கள் பதிக்கப்பட உள்ளது. மேலும் திறந்த வெளிகாட்சி அரங்கம், அருங்காட்சியம் அமைக்கப்படுகிறது

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் கட்டுமானகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப்பணிகள் இன்னும் 6 மாதத்தில் முடிக்கப்பட உள்ளது.

வருகிற ஜூன் 3-ந்தேதி கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் கருணாநிதியின் நினைவிடத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com