

கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால், தெற்கு ரெயில்வே 23, 24, 25 தேதிகளில் சென்னை, தாம்பரம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. இந்த ரெயில்கள் பல இடங்களில் நிறுத்தம் கொண்டுள்ளன.
கார்த்திகை தீபம் 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். பக்தர்கள் வசதிக்காக தெற்கு ரெயில்வே முன்பதிவு இல்லாத மெமு சிறப்பு ரெயில்களை 23, 24 மற்றும் 25-ந்தேதி ஆகிய 3 நாட்கள் அறிவித்துள்ளது.
சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. காலை 6.20 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு காலை 11.40 மணிக்கு சென்றடைகிறது.
இந்த சிறப்பு ரெயில் திருவண்ணாமலையில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.30 மணிக்கு கடற்கரை நிலையத்தை வந்தடைகிறது. 12 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், திருநின்றவூர், திருவள்ளூர், அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா ரோடு, காட்பாடி, வேலூர் கண்டோன்மென்ட் வழியாக செல்கிறது.
இதேபோல திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு காட்பாடிக்கு பிற்பகல் 3 மணிக்கு சென்றடைகிறது. மற்றொரு சிறப்பு ரெயில் திருவண்ணாமலையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு காட்பாடிக்கு இரவு 8 மணிக்கு சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் காட்பாடியில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு மாலை 5.30 மணிக்கு செல்கிறது. ரெயில் காட்பாடியில் இருந்து இரவு 8.55 மணிக்கு புறப்பட்டு இரவு 11.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடைகிறது.
தாம்பரத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் திரு வண்ணாமலைக்கு பகல் 1.30 மணிக்கு சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து இரவு 10.25 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் தாம்பரத்திற்கு மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு வந்து சேருகிறது. இந்த ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர் வழியாக செல்கிறது. திருவண்ணாமலை- விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதேபோல விழுப்புரம்- திருவண்ணாமலை இடை யே முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் விடப்பட்டு உள்ளது. விழுப்புரம்- வேலூர் கண்டோன்மெண்ட் இடையே சிறப்பு ரெயில்கள் விடப்பட்டுள்ளன.