dyfi

வயநாடு நிலச்சரிவு... DYFI சார்பில் அமைக்கப்பட்ட டீக்கடையில் தேநீர் அருந்தி நிதி வழங்கிய கனிமொழி

கேரள மாநிலத்திற்கு தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. கேரளாவிற்கு ஆந்திர அரசு ரூ. 10 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவிப்பு .
Published on

வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி அன்று வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 310க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்து வருகின்றன. தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. நேற்று ஆந்திர அரசு ரூ. 10 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி திரட்டும் விதமாக, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேநீர் கடையில் கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் இருவரும் தேநீர் அருந்தி நிதி உதவி வழங்கினர்.

இதற்கு முன்னதாக, தெலுங்கு திரையுலகில் இருந்து பிரபாஸ் இரண்டு கோடியும், சிரஞ்சீவி மற்றும் சரண் ஒரு கோடி ரூபாயும், அல்லு அர்ஜுன் ரூ. 25 லட்சம், ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம், தயாரிப்பாளர் நாகவம்ஷி ரூ. 5 லட்சம் என பிரபலங்கள் பலர் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நிவாரண நிதி அளித்துள்ளனர்.

இதேபோல், நடிகைகள் மீனா, குஷ்பு, சுஹாசினி மற்றும் சில சினிமா நட்சத்திரங்கள் நேரடியாகச் சென்று ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை கேரள முதல்வரிடம் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com