

திமுக ஆட்சியில் வரையறுக்கப்பட்ட காஞ்சிபுரம் புது நகர் வளர்ச்சித் திட்டம் மற்றும் பாரம்பரிய மறுமலர்ச்சித் திட்டத்தை தவெக அரசு ரத்து செய்துள்ளது.
சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த கடந்த திமுக ஆட்சியில் புதுநகர் வளர்ச்சி திட்டங்களானது செயல்படுத்தப்பட்டது.
அதன்படி, காஞ்சிபுரம், திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு புதுநகர் வளர்ச்சித் திட்டங்களை அன்றைய திமுக அரசு செயல்படுத்தியது.
தொடர்ந்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டு, கருத்து கேட்பு கூட்டங்கள் முடிக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இறுதியாக் திட்ட அறிக்கை தயார் செய்யும் நிலைக்கு வந்தது.
இந்த நிலையில் அதில் ஒரு திட்டத்தை தவெக அரசு ரத்து செய்துள்ளது. அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு 62.78 சதுர கி.மீ பரப்பளவில் 18 கிராமங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்ட அந்த அரசிதழை ரத்து செய்து தமிழ்நாடு அரசு மீண்டும் ஒரு அரசிதழை வெளியிட்டுள்ளது.
இதனால், திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, மறைமலை நகர், திருபெரும்புதூர் ஆகிய புது நகர் வளர்ச்சித் திட்டங்களின் நிலையும் கேள்விக்குறியாகி உள்ளது.