ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்கதான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM? - உதயநிதி கடும் விமர்சனம்!

புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும்.
 உதயநிதி ஸ்டாலின்
Published on: 
Summary

பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதலமைச்சர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி MLA அருள் விக்னேஷ் ஆபாச Message-ஏ அனுப்பவில்லை என்று பச்சைப்பொய் சொல்லி வந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய ஆங்கில நாளிதழ் செய்தி.

இந்த சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே இந்த அரசு நேற்று பொய் சொல்லியிருக்கிறது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா?

அதை முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்.எல்.ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா?

இதில் எது உண்மை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒருவேளை அந்த செய்தி மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதலமைச்சர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும்.

அப்போது தான், இந்த புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும்.

இந்த சம்பவத்தில் இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட MLA-வை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X