கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம்: விசாரணை குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு

விசாரணை குழுவின் தலைவராக வனத்துறை செயலர் காகர்லா உஷா பொறுப்பு வகிப்பார்
kallalurichi tvk mla
Published on: 

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விகாரம் தொடர்பாக விசாரணை குழுவை அமைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்த புகார் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கள்ளக்குறிச்சி எம்எல்ஏ சி. அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உள் புகார் குழு மைக்கப்பட்டுள்ளது, மேலும் காவல்துறை விசாரணையும் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு விசாரணை குழு அமைப்பு

கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது பெண் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட புகார் குறித்து விசாரிக்க தமிழக அரசு காகர்லா உஷா தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

விசாரணைககுழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள்

இந்த விசாரணை குழுவின் தலைவராக வனத்துறை செயலர் காகர்லா உஷா பொறுப்பு வகிப்பார் என்று தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.மதுமித ஐஏஎஸ், சட்டத்துறை செயலாளர் சுமதி, சுனிதாஜோ ஐபிஎஸ் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

60 நாட்கள் அவகாசம்

இந்த விசாரணைக் குழு 60 நாட்களில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலர்ன் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார்

காவல்துறை விசாரணை

இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகளின் கீழ் (பிரிவுகள் 75, 78, 79) வழக்கு பதியப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

குற்றவியல் வழக்கு விசாரணையைத் திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) ஸ்ரிஷ்டி சிங் மேற்கொள்வார்சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறை ஐஜி (நிர்வாகம்) என். காமினி இந்த விசாரணையைக் கண்காணிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த புதிய விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

X