

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, திமுக எம்பி கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், கலைஞர் கருணாநிதிக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலைஞர் கருணாநிதியின் படத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.