தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் நட்சத்திர ஓட்டலில் வருமான வரி சோதனை

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் உள்ளது.ஓட்டலில் பணிபுரியும் முக்கிய ஊழியர்களிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் நட்சத்திர ஓட்டலில் வருமான வரி சோதனை
Published on

மாமல்லபுரம்:

முன்னாள் மத்திய இணை அமைச்சரும் தற்போது அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது. அங்கு இன்று காலை 6 மணிக்கு நான்கு கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், ஓட்டல் அலுவலகத்தில் நுழைந்து அங்குள்ள கம்ப்யூட்டர், ஆவணங்களை சோதனையிட்டு வருகிறார்கள்.

ஓட்டல் மேலாளர், கணக்காளர் மற்றும் வெளி மாநில உணவு பொருட்கள், ஓட்டலுக்கு தேவையான ஆடம்பர அலங்கார பொருட்கள் வாங்கும் பிரிவுகளில் பணிபுரியும் முக்கிய ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓட்டலில் தங்கியிருக்கும் விருந்தினர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வழக்கம் போல் ஊழியர்கள் பின்புற வழியில் சென்று வருகிறார்கள். முன் பகுதியில் மட்டும் யாரையும் அனுமதிக்கவில்லை. ஜெகத்ரட்சகன் ஓட்டலில் வருமான வரி சோதனை நடப்பதால் ஓட்டல் கட்டுமான பணிகள் நடைபெற்றபோது கட்டுமான பொருட்கள் சப்ளை செய்த திருப்போரூர், மாமல்லபுரம் பகுதி தி.மு.க. பிரமுகர்கள் சிலர், அவர்களிடமும் விசாரணை வருமோ என பதட்டம் அடைந்துள்ளனர். இதனால் மாமல்லபுரம்-தேவநேரி இ.சி.ஆர் பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com