உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது மாவட்ட ஆட்சியரின் கடமை - திருமாவளவன்

தமிழ்நாட்டு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு திருப்பரங்குன்றத்தில் நீதியை நிலைநாட்ட உறுதிகுலையாமல் செயல்பட வேண்டும்.
thol thirumavalavan
Published on: 

திருப்பரங்குன்ற மலைஉச்சியில் தீபம் ஏற்றும்வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது மாவட்ட ஆட்சியரின் கடமைதான் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை கிளையில் அவசர வழக்கு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி தீபம் ஏற்ற வேண்டும். கலெக்டரின் 144 தடை உத்தரவு. சட்டவிரோதமானது என்று கூறி மதுரை மாவட்ட ஆட்சியரின் 144 தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தீபம் ஏற்றுவதை பக்தர்கள் தரையில் இருந்தவாறு பார்வையிட அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்கானது தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது மாவட்ட ஆட்சியரின் கடமைதான் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

இடைக்கால தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது ஆட்சியரின் கடமை

உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது மாவட்ட ஆட்சியரின் கடமைதான். ஆனால், நீதிபகளைப்போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்படமுடியாது. நீதிபதிகள் ஆவணங்களையும் ஆதாரங்களையும் சான்றுகளையும் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள் ஆவர்.

ஆனால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவ்வாறு செயல்பட இயலாது. மாநில அரசின் நிலைபாட்டினையும் கருத்தில் கொண்டே செயல்பட வேண்டியிருக்கும். உயர் அதிகாரிகளுக்கு ஆணையிடும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு.

திருப்பரங்குன்றத்தின் நீதியை நிலைநாட்ட வேண்டும்

எனவே, மாநில அரசு நீதித்துறை பயங்கரவாதத்துக்கு அஞ்சாமல் துணிந்து இதனை எதிர்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் தமிழ்நாட்டு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு திருப்பரங்குன்றத்தில் நீதியை நிலைநாட்ட உறுதிகுலையாமல் செயல்பட வேண்டும்.

என்று தெரிவித்துள்ளார்.

X