இன்ஸ்டா பிரபலம் ஹரீஷ் தற்கொலை - யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது

ஹரீஷ் கடந்த 20ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொணடார்.
Harish- Jason samvel
Published on: 

சென்னையை சேர்ந்த 27 வயதான ஹரிஷ், ‘ஃபைனான்ஸ் வித் ஹரிஷ்’ என்ற சமூக வலைதளம் ஒன்றை இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் நடத்தி வந்தார்.

நிதி ஆலோசனைகள்

இவரின் கணக்கை சமூக வலை தளங்களில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகாமோனோர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் தனது வலைப்பக்கம் மூலமாக பயனர்களுக்கு நிதி ஆலோசனைகள வழங்கி வந்தார்.

கணக்கு முடக்கம்

இதையடுத்து ஹரீஷ் நிதி ஆலோசனைகள் குறித்து தவறான தகவல்களை வழங்கி வருவதாக வென்ச்சர் ஸ்டுடியோ ஜெமூரியா இன்க் தலைமை செயல் அதிகாரியான ஜேசன் சாமுவேல் மெட்டா நிறுவனத்திடம் இணைய வழி மூலம் புகார் அளித்தார்.

இதன் காரணமாக சாமுவேல் வைத்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, ஹரிஷின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மெட்டா நிறுவனம் முடக்கியது.

தொடர்ந்து மன உளைச்சல்

இதையடுத்து ஹரிஷ் மற்றொரு சேனலை தொடங்கி வீடியோ வெளியிட்டு வந்த நிலையில், அதன் மீதும் புகார் அளிக்கப்பட்டது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஹரிஷ், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டிருந்தார்.

வீடியோ வெளியிட்ட பிறகு, ஹரீஷ் கடந்த 20ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொணடார்.

தந்தை புகார்

ஜேசன் சாமுவேல் என்கிற யூடியூபர் தான் ஹரிஷ் தற்கொலைக்குக் காரணம் என கானத்தூர் காவல் நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்தார்.

நிதி, முதலீட்டு ஆலோசனைகளை செபி சான்று குறித்து கேட்டு ஜேசன் மிரட்டியதாக ஹரிஷ் தந்தை புகார் அளித்தார்.

மேலும், ஹரிஷ் குறித்து தொடர்ந்து ஜேசன் சாமுவேல் அவதூறு பரப்பியதால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றம்சாட்டினார்.

கைது

இந்நிலையில், ஹரீஷ் மரணம் தொடர்பாக அவரது தந்தை புகார் அளித்ததை அடுத்து, போலீசார் ஜேசன் சாமுவேவை போலீசார் கைது செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com