Insta டூ CM ஆபீஸ்..! தேவா, ஜீவா உடன் உங்கள் ஸ்டாலின்..!- இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

Insta டூ CM ஆபீஸ்..! தேவா, ஜீவா உடன் உங்கள் ஸ்டாலின்..!- இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ
Published on
Summary

இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளம் மூலம் பிரபலமான பண்ருட்டியைச் சேர்ந்த சிறுவர்கள் தேவா, ஜீவா உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

மழலை மொழியில் பேசி சமூக ஊடகங்களில் கலக்கும் சிறுவர்கள் இருவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்ததுடன் அட்வைஸ் வழங்கினார். அப்போது, சிறுவர்கள் இருவரும் முதலமைச்சருடன் ரீல்ஸ் எடுத்துக்கொண்டனர்.

இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவுடன் கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில்,"படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க.. எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாவில் கலக்கும் சிறுவர்கள்.

தேவா, ஜீவா உடன் உங்கள் ஸ்டாலின்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com