தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் முதல்வர் மருந்தகங்களில், ஏழை, எளிய மக்கள் நாடி வரும் அத்தியாவசிய ‘ஜெனரிக்’ மாத்திரைகள் பல நாட்களாகக் கிடைக்காமல் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மக்கள் நலனில் துளியும் அக்கறையற்ற முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் படுமோசமான நிர்வாகச் சீர்கேட்டின் நேரடிக் காரணமாகும என்று தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் முதல்வர் மருந்தகங்களில், ஏழை, எளிய மக்கள் நாடி வரும் அத்தியாவசிய ‘ஜெனரிக்’ மாத்திரைகள் பல நாட்களாகக் கிடைக்காமல் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது.
வெளிச்சந்தையை விடக் குறைந்த விலையில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வரும் நோயாளிகள், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அடிப்படை மருந்துகள் கூடக் கிடைக்காமல் ஏமாற்றத்துடனும் விரக்தியுடனும் திரும்பிச் செல்கின்றனர்.
கூட்டுறவுத் துறையையும் தமிழக மருத்துவப் பணிகள் கழகத்தையும் ஒருங்கிணைத்து மருந்து விநியோகத்தைச் சீரமைக்கத் திறனற்ற அமைச்சர் அருண்ராஜ், மக்களின் மருத்துவ அவதியைக் கண்டும் காணாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பிரதமர்
அவர்களின் தலைமையிலான மத்திய பாஜக அரசு 'மக்கள் மருந்தகங்கள்' மூலம் நாடு முழுவதும் தரமான ஜெனரிக் மருந்துகளைத் தடையின்றி மக்களுக்கு வழங்கி மக்கள் சேவையில் முன்மாதிரியாகத் திகழ்கிறது. ஆனால், தமிழகத்திலோ ஆளும் தவெக அரசின் மெத்தனப் போக்கால் இந்த மருந்தகங்கள் அனைத்தும் செயலிழந்து கிடக்கின்றன.
எனவே, இனியாவது ஏழை, எளிய மக்களின் உயிரோடு விளையாடுவதை நிறுத்திவிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முதல்வர் மருந்தகங்களிலும் தட்டுப்பாடின்றி உடனடியாகத் தரமான ஜெனரிக் மருந்துகளை இருப்பு வைக்க முதலமைச்சர் விஜய் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்
என்று தெரிவித்துள்ளார்.