திருப்பத்தூரில் இரட்டை கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது

தகவல் அறிந்த திருப்பத்தூர் எஸ்.பி. அக்சய் அணில் வாக்கரே, டி.எஸ்.பி. முரளி ஆகியோர் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கைது
கைது
Published on: 
Summary

திருப்பத்தூரில் இரட்டை கொலை வழக்கில் மாலினி மற்றும் ரஞ்சித் கொலை செய்யப்பட்டனர். கள்ளக்காதலின் பின்னணியில் சஞ்சீவ் காந்தி கைது செய்யப்பட்டு, கொலை நடந்த விதம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் திரு.வி.க.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாலினி. இவருக்கும் திருப்பத்தூர் அடுத்த சிம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி என்பவருக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

வெட்டிக் கொலை

இவர்களுக்கு 13 வயதில் மகள், 16 வயதில் மகன் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் பாய்ச்சல் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (31) என்பவர் மாலினியின் உறவினர் ஆவார். மாலினிக்கும் ரஞ்சித்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது திருமணத்தை மீறிய உறவாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலினியும் ரஞ்சித்தும் திருப்பத்தூர் அடுத்த தோரணம் பகுதியில் உள்ள காலி இடத்துக்கு காரில் சென்றனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்மநபர் திடீரென இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். இது பற்றி தகவல் அறிந்த திருப்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தகவல் அறிந்த திருப்பத்தூர் எஸ்.பி. அக்சய் அணில் வாக்கரே, டி.எஸ்.பி. முரளி ஆகியோர் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்தக் கொலை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர்.

இதற்கு இடையே செங்கம் அடுத்த திரு.வி.க. நகர் பகுதியை சேர்ந்த சஞ்சீவ் காந்தி என்பவருக்கும் மாலினிக்கும் கள்ளக்காதல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திருவண்ணாமலையில் பதுங்கி இருந்த சஞ்சீவ் காந்தியை நேற்று இரவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

கள்ளக்காதலன் கைது

முதற்கட்ட விசாரணையில் இவர்கள் இருவரும் ஒன்றாக படித்தவர்கள் என்று தெரியவந்தது. சஞ்சீவ் காந்தி, மாலினி மற்றும் ரஞ்சித்தை பட்டப்பகலில் தனியார் காலி மனையில் வைத்து வெட்டி படுகொலை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு அவரை அழைத்து சென்றனர்.

2 பேரையும் வெட்டி கொலை செய்தது எப்படி என அவர் செய்து காட்டினார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X