கரூர் வழக்கில் தீர்ப்பு வந்தால் தவெக என்ற கட்சியே இருக்காது- எடப்பாடி பழனிசாமி

வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுங்கள்.
EPS
Published on

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி அன்று நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி, தமது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தின் முதல் நாளான இன்று செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 'மாமண்டூர்' என்ற இடத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, மதுராந்தகம் தொகுதியின் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்திற்கு ஆதரவாக எடப்பாாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் உரையாற்றியதாவது:-

வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுங்கள்.

பணத்தாசையால் அதிமுகவில் இருந்து தவெகவிற்கு சென்று தேர்தலில் போட்டுயிடுபவர்கள் வெல்லப்பட வேண்டும்.

மதுராந்தகம் தொகுதியில் நிற்கும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் டெபாசிட் இழக்க வேண்டும்.

அதிமுக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் பேசி பதவியை ராஜினாமா செய்ய வைத்து 5 நிமிடத்தில் தவெகவில் இணைத்துள்ளனர்.

நாட்டில் எந்த கட்சியும் இப்படியொரு இழிவான செயலை செய்தது இல்லை.

விஜயின் கரூர் தேர்தல் பரப்புரையின்போது 40 பேர் பலியாகினர், அப்போது ஓடியவர் 70 நாட்கள் வெளியில் வரவில்லை.

70 நாட்கள் வீட்டைவிட்டு வெளியில் வராத ஒருவர் எப்படி தமிழக மக்களை காப்பாற்றுவார் என எண்ணிப்பாருங்கள்.

தனது கூட்டத்திற்கு வந்து பலியான அப்பாவிகளின் உடலுக்குக்கூட அஞ்சலி செலுத்த தவெக தலைவர் வரவில்லை.

கரூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தையே 15 நாட்கள் பூட்டிவிட்டு தலைமறைவாடிவிட்டனர்.

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்தால் தவெக என்ற ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருக்குமா? இல்லையா? எனத் தெரியவரும்.

கரூர் விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது, யாரு காரணம் என்ற உண்மை விரைவில் வெளியில் வரும்.

விஜய் மீதான சிபிஐ விசாரணை இன்னும் முடியவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம்.

ரீல்ஸ் தான் தவெகவின் மூலதனம்

ரீல்ஸை வைத்துதான் தவெக ஓடிக்கொண்டிருக்கிறது. ரீல்ஸ் தான் தவெகவின் மூலதனம்.

தவெக ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் எத்தனை போராட்டங்கள்?

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com