'I AM WAITING' : அண்ணாமலையை குறிப்பிட்டு அதிமுக கோவை வேட்பாளர் எக்ஸ் பக்கத்தில் பதிவு

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானதுபாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்
'I AM WAITING' : அண்ணாமலையை குறிப்பிட்டு அதிமுக கோவை வேட்பாளர் எக்ஸ் பக்கத்தில் பதிவு
Published on

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது.

முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்.

இதேபோல், தெற்கு சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னையில் வினோத் பி செல்வம், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன் போட்டியிடுகின்றனர்.

தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் நரசிம்மன், வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், கோவையில் தனக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள பாஜக வேட்பாளர் அண்ணாமலையை, 'IAM WAITING' என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு அதிமுக வேட்பாளர் சிங்கை G ராமச்சந்திரன் வரவேற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com