வேங்கைவயல் சம்பவத்தின் கொடூரம் தவெக ஆட்சியிலும் தொடர்கிறது - நயினார் நாகேந்திரன்

கடந்த கால சம்பவத்தின் கொடூரம் தற்போதும் தொடர்வது திமுக ஆட்சியும் தவெக ஆட்சியும் ஒன்றே என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.
nayinar nagendran
Published on: 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழவெளியில் அமைந்துள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர் ஒருவரின் மேசையின் மீது மனித மலத்தை வீசியுள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரத்திற்கு தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் பின்னணி

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழவெளியில் அமைந்துள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர் ஒருவர் ஊழியர்கள் தனது மேஜையின் மீது மனித மலத்தைக் கொட்டியதாகக் குற்றம் சாட்டியிருந்தார்

இந்தச் சம்பவம் நவம்பர் 10-ஆம் தேதி நடந்ததாகக் கூறப்பட்டாலும், அந்த ஆய்வக உதவியாளர் ஜெயங்கொண்டம் துணை காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாருக்கு பின்னரே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது

கல்வி அதிகாரி வருவதற்கு முன்பே தடயங்களை அழித்து, வெறும் இடமாற்றத்துடன் விவகாரத்தை மூடிமறைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரத்திற்கு தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

விவகாரத்தை மூடிமறைத்டிருப்பது கண்டனத்திற்குரியது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில், பட்டியலின ஆய்வக உதவியாளர் கண்ணதாசன் மேஜையில் மனித மலம் வைக்கப்பட்டதும், பட்டியலின ஆசிரியர்களுக்குச் சாதிப் பாகுபாடு காட்டப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

நவம்பர் 10-ஆம் தேதி நடந்த இக்கொடுமையில், கல்வி அதிகாரி வருவதற்கு முன்பே தடயங்களை அழித்து, வெறும் இடமாற்றத்துடன் விவகாரத்தை மூடிமறைக்க முயன்றிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கடந்த கால வேங்கைவயல் சம்பவத்தின் கொடூரம் இன்று தவெக ஆட்சியிலும் அரசுப் பள்ளியிலேயே தொடர்வது, திமுக ஆட்சியும் தவெக ஆட்சியும் ஒன்றே என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

இரண்டு வாரங்களாகக் காவல்துறை விசாரணையைத் தாமதப்படுத்துவதற்குப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும்.மேலும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

X