

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது கடையில் வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருட்களின் வெப்பம் காரணமா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பட்டாசு கடைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிவகாசி அருகே பூட்டப்பட்டிருந்த ஒரு பட்டாசு கடையில் எதிர்பாராதவிதமாக திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கடை பூட்டப்பட்டிருந்த நிலையில், உள்ளே வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் ஒன்றன்பின் ஒன்றாக மிகக் கொடூரமாக வெடித்துச் சிதறின. இதனால் கடை முழுவதும் தீப்பற்றி எரிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் கடையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் முற்றிலும் வெடித்து சிதறி சாம்பலாகின.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், பல மணி நேரம் போராடி எரியும் தீயைக்ட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பூட்டப்பட்ட கடை என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது கடையில் வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருட்களின் வெப்பம் காரணமாக விபத்து நடந்ததா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.