ஜீரோ கட்சியைப் பார்த்துதான் ஹீரோ கட்சி பயப்படுகிறது: மதுராந்தகத்தில் சீமான் பேச்சு

நான் ஏமாற்ற வந்தவன் அல்ல, அனைத்தையும் மாற்ற வந்தவ
சீமான்
சீமான்
Published on: 
Summary

சமூக மாற்றம் என்பதும், முன்னேற்றம் என்பதும் மேம்பாடு என்பதும் கல்வியில் இருந்துதான் தொடக்கம். நாங்கள் கட்டணம் இல்லாமல் கல்வியை தருவோம்.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது சீமான் பேசியதாவது:-

ஒரு கட்சியில் இருந்து போட்டியிட்டு வென்ற பதவியை ராஜினாமா செய்து மீண்டும் அதே பதவிக்கான தேர்தலை வேறொரு கட்சியில் இருந்து சந்திக்கும் நிலை வேடிக்கையானது. இவர்கள் (த.வெ.க.) மக்களின் பணத்தை வீணடிக்க மாட்டோம் என்கிறார்கள். ஆனால், இதனால் எவ்வளவு நேரம் விரையம், பண விரையம்.

தேர்தல் வாக்குறுதியில் உதவித்தொகை கொடுக்கிறோம் என்கிறார்கள். ஆனால் இந்த தொகை எங்கிருந்து வருகிறது என மக்கள் சிந்திக்க வேண்டும். த.வெ.க. சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல் எதற்காக அவசரமாக பதவி விலகி விட்டு அந்த கட்சியில் சேர வேண்டும்.

இலவச கல்வி

சமூக மாற்றம் என்பதும், முன்னேற்றம் என்பதும் மேம்பாடு என்பதும் கல்வியில் இருந்துதான் தொடக்கம். நாங்கள் கட்டணம் இல்லாமல் கல்வியை தருவோம். முதல்-அமைச்சருக்கோ, மற்ற அமைச்சர்களுக்கோ உடல்நிலை சரியில்லை என்றால் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு செல்கின்றனர். ஏனெனில் அரசு ஆஸ்பத்திரிகள் தரமாக இல்லை. என் மக்கள் என்னை தோற்கடித்து தோற்கடித்து ஒரு நாள் என்னிடம் தோற்று விடுவீர்கள்.

தேவையில்லாத தேர்தல்

தேவையில்லாமல் இந்த தேர்தலை திணித்துவிட்டு, எவ்வளவு கால விரையம் பண விரயம் ஏற்படுகிறது. இப்போது மட்டும் தேர்தலில் ஜெயித்து விட்டால் மரகதம் குமரவேல் வேறு கட்சிக்கு மாறமாட்டார் என்று என்ன நிச்சயம் இருக்கிறது.

எப்படி 2500 ரூபாய் கொடுக்கப்போகிறார்கள், 6 சிலிண்டர் கொடுப்பார்கள் என்று பார்க்கத்தானே போகிறோம். அரசுக்கு வருமானம் வரும் அனைத்தையும் இலவசமாக கொடுத்துவிட்டு, பின்னர் கடன் வாங்கி செலவு செய்வது ஏன்?. ஒருமுறை மாற்றி ஓட்டு போடுங்கள்.

நான் ஏமாற்ற வந்தவன் அல்ல, அனைத்தையும் மாற்ற வந்தவன். சீமான் 'ஜீரோ' கட்சி என்கிறார்கள். இந்த 'ஜீரோ' கட்சியைப் பார்த்துதான் 'ஹீரோ' கட்சி பயப்படுகிறது.

இவ்வாறு சீமான் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com