தமிழக அரசின் தொழில் முதலீட்டு ரகசியங்களை ஆந்திர அரசுக்கு கசியவிட்டதாக 15 மூத்த அதிகாரிகள் பணிநீக்கம்?

தமிழகத்திற்கு வரவிருந்த சில பெரிய திட்டங்கள் ஆந்திரப் பிரதேசத்திற்குத் திருப்பி விடப்பட்டதற்கு இந்தக் கசிவுகளே காரணம்?
முதலமைச்சர் விஜய், அமைச்சர் கீர்த்தனா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
Published on: 
Summary

தமிழக அரசின் முதலீட்டு ரகசியங்களை ஆந்திராவுக்கு கசியவிட்டதாக 15 அதிகாரிகளை தவெக அரசு பணிநீக்கம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசின் முதலீட்டு ரகசியங்களை ஆந்திர பிரதேச அரசுக்கு கசியவிட்ட குற்றச்சாட்டின் பேரில் 15 மூத்த அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் தொழில்துறை அமைச்சராக கீர்த்தனா இருந்து வருகிறார். இந்நிலையில் மாநிலத் தொழில்துறையின் கீழ் செயல்படும் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனமான 'கைடன்ஸ் தமிழ்நாடு'வில் பணியாற்றும் இந்த அதிகாரிகள், உள் விசாரணைக்குப் பின் அவர்கள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கசிவு

தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பிய முக்கிய நிறுவனங்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகள் தொடர்பான முக்கியத் தகவல்களை இந்த அதிகாரிகள் ஆந்திரப் பிரதேச அரசுக்கு வழங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 2016-2021-க்கு இடைப்பட்ட காலத்தில் அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் எனவும் திமுக ஆட்சியில் இவர்கள் தொடர்ந்து பயணியாற்றினர் எனவும் கூறப்படுகிறது.

ஆந்திராவில் பணியில் சேர்ந்த மூவர்

அதே நேரம் பணிநீக்கம் செய்யப்பட்ட 15 பேரில் ப்ரீஜா பிரசாத், கிறிஸ்டோ லாரல் எல் மற்றும் பிரபாகரன் ஆண்டி ஆகிய மூவர் அண்மையில் ஆந்திரப் பிரதேசத்தின் பொருளாதார மேம்பாட்டு வாரியத்தில் பணியில் சேர்ந்துள்ளனர். இது சந்தேகத்துக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

தமிழகத்திற்கு வரவிருந்த சில பெரிய திட்டங்கள் ஆந்திரப் பிரதேசத்திற்குத் திருப்பி விடப்பட்டதற்கு இந்தக் கசிவுகளே காரணம் என்ற சந்தேகம் எழுந்துள்ள சூழலில் கசிந்த தகவல்கள் குறித்த விவரம் வெளியாகிவிலை.

டி.ஆர்.பி. ராஜா

திமுக அரசில் தொழில்துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பி. ராஜா, இது தவெக அரசின் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக விமர்சித்தார்.

கடந்த காலத்தில், திமுக அரசு அனுபவம் வாய்ந்த அதிகாரிகளைப் பராமரித்து தொழில்துறை முன்னேற்றத்தை அடைந்ததாகவும், தற்போதைய ஆட்சியாளர்கள் தங்கள் திறமையின்மையை மறைப்பதற்காக அதிகாரிகள் மீது பழி சுமத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

X