தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பாதிப்பு, பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு மற்றும் புதிய தொற்று பரவல் குறித்த முக்கியத் தரவுகளை மாதந்தோறும் வெளியிடுவதை தமிழ்நாடு சுகாதாரத்துறை நிறுத்தியுள்ளது. இது சுகாதார நிபுணர்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது .
இந்த நிலையில் தவெக அரசின் மருத்துவத் திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான இதழ்களை வெளியிடுவதை நிறுத்தியிருப்பதற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலை தள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
மக்களின் அடிப்படை உரிமையான தகவல் அறியும் உரிமைக்கும், வெளிப்படைத்தன்மைக்கும் எதிரான தற்போதைய தவெக அரசின் இந்த நடவடிக்கை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும். தவெக அரசின் மருத்துவத் திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான இதழ்களை வெளியிடுவதை நிறுத்தியிருப்பதற்கும் எனது வன்மையான கண்டனங்கள்
கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான 'திராவிட மாடல்' ஆட்சியில், மக்களின் நலனையே முதன்மையாகக் கொண்டு, தரவுகளின் அடிப்படையிலான வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் அரசுக்கு எப்போதும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட்டது. ஆனால், ஜனநாயகத்தில் உண்மைகளை மூடிமறைப்பது ஒருபோதும் தீர்வாகாது!
என்று தெரிவித்துள்ளார்.