முக்கிய சுகாதாரத் தரவுகள் வெளியீட்டை நிறுத்திய தமிழக அரசு

பொது சுகாதார நிபுணர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 முக்கிய சுகாதாரத் தரவுகள் வெளியீட்டை நிறுத்திய தமிழக அரசு
Published on: 

நோய் பாதிப்புகள், நோய்ப் பரவல்கள், தாய் மற்றும் சிசு மரண விகிதங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு வந்த தனது மாதாந்திர அறிக்கைகளை, தமிழக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் நிறுத்தி வைத்துள்ளது.இந்த விவகாரம் பொது சுகாதார நிபுணர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தரவுகள் நிறுத்தம்

நோய் பாதிப்புகள், நோய்ப் பரவல்கள், தாய் மற்றும் சிசு மரண விகிதங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு வந்த தனது மாதாந்திர அறிக்கைகளை, தமிழக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் நிறுத்தி வைத்துள்ளது.

மேலும், அரசுத் திட்டங்களின் விளைவு ஆய்வுகள், நோய்ப்பரவல் ஆராய்ச்சி மற்றும் நோய்களின் விவரங்கள் அடங்கிய தனது மருத்துவ இதழையும் அத்துறை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது.

உண்மைகள் தவறாக சித்தரிக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே இவ்வாறு செய்ததாக அரசு கூறினாலும், வெளிப்படைத்தன்மை இல்லாதது அதிக தீங்கை விளைவிக்கும் என்று பொது சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கடைசியாக பிப்ரவரி 2026-க்கான மாதாந்திர புள்ளிவிவர அறிக்கை ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது. அதன் பிறகு மே மாதம் முதல் அறிக்கைகள் வரவில்லை. மருத்துவ இதழின் கடைசிப் பதிப்பு 2025 ஜூலை-செப்டம்பர் காலாண்டிற்கானது மட்டுமே.

ஊடகங்கள் தரவுகளைத் தவறாக மேற்கோள் காட்டியதாலும், உண்மைகளைத் திரித்துக் கூறியதாலும் மாதாந்திர அறிக்கைகளைத் திரும்பப் பெறுமாறு அரசு தங்களைக் கேட்டுக்கொண்டதாகவும்,

அறிக்கையில் உள்ள எண்கள், தொற்று உறுதிசெய்யப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையாகும். அவற்றை, பரிசோதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை மற்றும் பருவகால மாற்றங்களுடன் ஒப்பிட வேண்டும்.

பல நேரங்களில், ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மை நிலவரத்தை பிரதிபலிப்பதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்ததாக ஆங்கில செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது .

X