குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

தேர்வு வரும் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
TNPSC
Published on: 

2026-ம் ஆண்டுக்கான குரூப்-2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

குரூப்-2 மற்றும் குரூப்-2A பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு வரும் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு ஆகஸ்டு மாதம் 11ம் தேதி வெளியிடப்பட்டது.

இதன் மூலம் உதவி ஆய்வாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-II, சிறை அலுவலர் உள்ளிட்ட மொத்தம் 821 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்நிலையில், குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com