Guidance TN முகமையில் இருந்து ஊழியர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா ?- தமிழக அரசு விளக்கம்

ஊழியர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக பணியிலிருந்து விலகுவது இயல்பானது.
TN Govt
Published on: 

கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பில் இருந்து ஊழியர்கள் வெளியேறியது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

அதில், Guidance தமிழ்நாடு நிறுவனத்தில் கடந்த ஜூலை மாதம் பெருமளவில் ஊழியர்கள் ராஜினாமா செய்யவில்லை என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள Guidance தமிழ்நாடு, சொந்த காரணங்களுக்காக மட்டுமே கைடன்ஸ் அமைப்பின் பணியாளர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

ஊழியர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக பணியிலிருந்து விலகுவது இயல்பானது.

மேலும், பிற மாநிலங்களுடன் ஆரோக்கியமான போட்டியைத் தொடர்ந்து முதலீடுகளை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பமான மாநிலமாகத் தொடர்ந்து விளங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

X