தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 27, 2026 அன்று முற்பகல் அமர்வில் நடைபெற உள்ளது.இத்தேர்விற்கு தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வானது நடைப்பெற இருக்கிறது.
வரும் 27ம் தேதி நடைப்பெறவுள்ள குரூப் 1 தேர்வுக்கான அனுமதி நுழைவு சீட்டு வெளியாகியுள்ளது.ஹால்டிக்கெட்டை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பு எண் 05/2026, நாள் 23.06.2026-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு ,தொகுதி பணிகள்பதவிகளுக்கான முதல்நிலை கொள்குறி வகை மற்றும் ஒளிக்குறி உணரி தேர்வு 27.09.2026 முற்பகல் நடைபெற உள்ளது.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணைய தளம் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு OTR DASHBOARD மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கான ஹால் டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
என்று தெரிவித்துள்ளது.