

ஆண்டு பருவமழை பொய்த்த நிலையிலும் பாரம்பரியத்தைத் தொடர கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, சுமார் 750 கிலோ அரிசி, 750 கிலோ ஆட்டுக்கறி கொண்டு பிரமாண்டமான அசைவ விருந்து தயாரிக்கப்பட்டது.
தென்மாவட்டங்களில் குறிப்பாக கிராம காவல் தெய்வங்களாக வீற்றிருக்கும் கோவில் திருவிழாக்களில் பெரும்பாலும் கறிவிருந்து படைக்கப்படுவது தொன்று தொட்டு இருந்து வருகிறது. அதிலும் மேலூர், திருமங்கலம் பகுதிகளில் உள்ள கருப்பணசாமி, முனியசாமி உள்ளிட்ட கோவில்களில் இந்த விருந்து பிரசித்தி பெற்றது.
அதிலிருந்து மாறுபட்டு சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள பூலாம்பட்டி கிராமத்தில், விவசாயிகளின் உழைப்பையும் தியாகத்தையும் நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய மத நல்லிணக்க கறி விருந்து விழா, இந்த ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னோர்கள் காலம் தொட்டு பெருநாள் தொழுகை திடல் பள்ளிவாசலில் நடைபெற்று வரும் இவ்விழாவிற்காக, இந்த ஆண்டு பருவமழை பொய்த்த நிலையிலும் பாரம்பரியத்தைத் தொடர கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, சுமார் 750 கிலோ அரிசி, 750 கிலோ ஆட்டுக்கறி கொண்டு பிரமாண்டமான அசைவ விருந்து தயாரிக்கப்பட்டது.
இதில் முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். மத வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து விருந்துண்டு மகிழ்ந்தனர். மனிதநேயம், சகோதரத்துவம், ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தும் இவ்விழா, பூலாம்பட்டி கிராமத்தின் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் இந்த பாரம்பரிய விழா, கிராமத்தில் திருவிழா போன்ற மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தியதுடன், சமூக ஒற்றுமையையும் பறைசாற்றியது. இந்த விருந்தில் அக்கம்பக்கத்து கிராமத்தினரும் திரளாக பங்கேற்றனர்.